நோக்கு

இலங்கைத் தீவின் சௌபாக்கியமான மாவட்டமாக மாற்றுதல்

பணிக்கூற்று

மாவட்டத்திற்குள் நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் பொருட்டு பொது மக்களின் பல்வேறு தேவைகளை வினைத்திறன், நியாயம், கண்ணியம், நேர்மை, சிநேக மனப்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்வதற்காக வளங்களையம், நிறுவனங்களையும் பயனுறுதிமிக்கதாக நெறிப்படுத்தி, ஒருங்கிணைப்புச் செய்தல்

பொலன்னறுவை இலங்கையின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது. அநுராதபுரத்தை ஆண்ட மன்னர்கள் பொலன்னறுவையை உப நகரமாக அபிவிருத்தி செயதமைக்கான காரணம் யாதெனில் பிரதேசத்தில் நெற்பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமான வளமான மண்ணும் நீர்ப்பாசன வசதிகளும் காணப்பட்டமையிலானதாகும். இந்நோக்கத்திற்காக வசப மன்னன் கி.பி.67-111 எலஹெர வாய்க்காலை வெட்டுவித்தான். மகாசேன மன்னன் கி.பி.274-301 மின்னேரிய குளத்தையும் கவுடுலு குளத்தையும் , 1ஆம் உபதிஸ்ஸ மன்னன் கி.பி.365-406 தோப்பாவெவ குளத்தையும் 2ஆம் அக்போதி மன்னன் கிரிதலே குளத்தையும் கட்டுவித்தனர். பாதுகாப்பை பொறுத்தவரை பொலன்னறுவை மிக முக்கியமான இடத்தை பெற்றிருந்த்து​

10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த சோழ பாண்டிய மன்னர்களினால் இடம் பெற்ற அவ் ஆக்கிரமிப்பில் வெற்றி பெற்ற சோழர்கள் கி.பி.993 இல் அநுராதபுரத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். அவர்கள் பொலன்னறுவையை தலைநகரமாக மாற்றினர். 70 வருடங்களுக்குமேலாக ரஜரட்டை இராசதானி சோழ மன்னர்களின் ஆட்சியின் கீழ் காணப்பட்டதோடு அவர்களது செயற்பாடுகள் காரணமாக அங்கு காணப்பட்ட விவசாய பொருளாதார முறைமை முற்றாக அழிந்தது.

சோழர் ஆட்சியிலிருந்து ரஜரட்டை இராசதானியை மீட்டெடுத்தவர் மகா விஜயபாகு மன்னனாவார் (கி.பி.1055-1110). இவர் முழு நாட்டையும் ஒன்றிணைத்து சோழர்களினால் அழித்தொழிக்கப்பட்ட குளங்கள் அணைகள் மற்றும் விகாரைகள் போன்றவற்றை திருத்தியமைத்து சாசன மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆரம்பமாகின. மகா பராக்கிரமபாகு மன்னன் (கி.பி.1153-1186) மகா விஜயபாகு மன்னனினால் நடாத்தப்பட்ட சிறந்த ஆட்சியை மேலும் முன்னோக்கிக் கொண்டு சென்றனர். நிஸ்ஸங்கமல்ல அரசன் (கி.பி.1187-1196) அப்போது காணப்பட்ட நிலைமையை மேலும் சிறப்பாக நடாத்தினார். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த பலவீனமான அரசர்களின் பலவிதமான ஆட்சி காரணமாக பொலன்னறுவை நிர்வாகம் வீழ்ச்சியடைந்தது. அச்சந்தர்ப்பங்களைப்பயன்படுத்திக் கொண்ட காலிங்க மாக மன்னன் (கி.பி.1214) ரஜரட்டை இராசதானியை கைப்பற்றி அழித்ததன் காரணமாக அரசதானியை தென்மேற்கு பிரதேசத்திற்கு மாற்றப்பட்டதுடன் இப்பிரதேசமானது காடு பற்றிக் காணப்பட்டது. பற்றைக் காடுகளினாலும் மண்ணினாலும் மூடிக்காணப்பட்ட தொல்லியல் ஸ்தானங்களை பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் காடுகள் துப்பரவு செய்யப்பட்டு அவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டுபாதுகாக்கப்பட்டது. அவ் அபிவிருத்தி நடவடிக்கைகள் மத்திய கலாச்சார நிதியம் மூலம் மேலும் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது பொலன்னறுவையானது உலக மரபுரிமை நகராக பெயரிடப்பட்டுள்ளது’.

பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லைகள்

இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டமானது தலைநகரமான கொழும்பிலிருந்து 216 கி.மீ. தூரத்தில் மகாவலி சமவெளியில் அமைநதுள்ளது. பிரதான நகரமும் பொலன்னறுவை என்றே அழைக்கப்படுகின்றது. இதன் முழுப்பரப்பளவு 3337.9 சதுர கி.மீ. ஆகும். வட அகலாங்கு 7’ 40” – 8’ 21” கிழக்கு நெட்டாங்கு 80’ 44” – 81’ 20” YD ஆகும். உயரம் 50-500 அடியாகும். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

காலநிலை

பொலன்னறுவை மாவட்டத்தின் வருடாந்த வெப்பநிலை 28.6 செ. பாகை ஆகும். உயர் வெப்பநிலை 36.8 செ. பாகை ஜூலை, அகோஸ்ட் மாதங்களில் நிலவும். தாழ்வெப்பநிலை சனவாரி, பெப்ரவரி மாதங்களில் நிலவும். அது 20. 6 செ. பாகை ஆகும். பொலன்னறுவை மாவட்டத்திற்கு வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை கிடைக்கும். அது செப்டம்பர் மாதத்திலிருந்து சனவாரி மாதம் வரை நீடிக்கும். வருடாந்த மழை வீழ்ச்சி 119.78 மி. மீ ஆகும்.

மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள் பெயர் விபரம்.

பொலன்னறுவை மாவட்டம்.

தொ.இல.

பெயர்

பதவிக் காலம்

1

திரு. சீ.ஈ.எம். அமரசேகர

1952-1953

2

திரு. சீ.டீ. பொன்சேகா

1954-1955

3

திரு. டப்.டி. ஜயசிங்க

1955.10.20-1958.06.01

4

திரு. டீ.ஆர்.எல். பாலசூரிய

1958.06.02-1960.12.11

5

திரு. டப்.ஏ.பீ.சீ. செனரத் நந்ததேவ

1960.12.12-1961.03.31

6

திரு. டப்.ஆர்.பி. திலகரத்ன

1961.04.01-1964.01.01

7

திரு. ஐவன் சமர விக்ரம

1964.01.01-1967.08.08

8

திரு. கே.எச்.ஜே. விஜேதாச

1967.08.08-1970.07.02

9

திரு. சூரியகொட கபிலரத்ன பண்டா

1970.07.02-1971.06.06

10

திரு. ஆர்.கே.சீ. சந்தானந்த டீ சில்வா

1971.06.06-1972.01.02

11

திரு. டி. அமரதாச குணவர்தன

1972.01.03-1978.03.01

12

திரு. ஒஸ்டின் பெனாண்டோ

1978.03.01-1980.02.29

13

திரு. எச்.எம்.டப். சமரகோன்

1980.03.01-1982.08.26

14

திரு. யு.ஜி. ஜயசிங்ஹ

1982.08.27 - 1992.11.25

15

திரு. ஜி.எச்.கே. அபேகோன்

1992.11.26 - 2000.05.20

16

திரு. எஸ்.ஏ.பி. மஹாகெஹெல்வெல

2000.05.21 - 2001.10.09

17

திரு. டி.எம். அபேவிக்ரம

2001.10.10 - 2002.10.30

வெற்றிடம்

2002.11.01 - 2003.08.03

18

திரு. ஆர்.எம்.எம்.பீ. ரத்னாயக்க

2003.08.04 - 2004.07.22

19

திரு.ஜே. ரஞ்சித் விஜேதிலக்க

2004.07.16 - 2008.10.08

20

திரு. ஏ.ஏ.ஜி. ஹூணுபொலகம

2008.10.08 - 2008.10.23

21

திரு. நிமல் அபேசிறி

2008.10.24 - 2015.03.15

22

திருமதி. டி.பி. பபாசீலி ஜயலத்

2015.03.16 - 2015.03.25

23

திரு. சேனாநாயக்க

2015.03.26 - 2016.11.20

24

திரு. ரஞ்சித் ஆரியரத்ன

2016.11.21 - 2018.08.14

25

திரு. பண்டுக எஸ்.பி. அபேவர்தன

2018.08.15 - 2020.02.17

26 டபிள்யூ.ஏ.தர்மசிறி 2020.02.18